சில கீரை வகைகளின் பயன்கள்
1. பசலைகீரை:
- இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
- குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு
வியாதிகளை வர விடாமல் தடுக்கிறது.
- பார்வைக் குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது.
- இந்தக்கீரையில் பச்சையமானது அதிகமாக
உள்ளது.நம் உடலில் உள்ள கொழுப்பை
கரைக்கிறது.
- இந்தக்கீரையை உணவில் சேர்த்து
கொள்வதால் உடல் பருமனாவதை
தவிர்க்கலாம்..
- வாய்ப்புண்ணுக்கு மிக சிறந்த மருந்தாகும்.
- பசலைக் கீரை குளிர்ச்சி தன்மை கொண்டது.
2. மணத்தக்காளி கீரை:
- தொண்டை கட்டு உள்ளவர்கள் (பாடகர்கள்,
ஆசிரியர்கள், பேச்சையே தொழிலாக
கொண்ட மேடை பேச்சாளர்கள்
போன்றவர்கள் தொடர்ந்து அதிகம்
பேசுவதால்) மணத்தக்காளி கீரையை
பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிட்டு
வந்தால் குணமாகும்.
- வயிற்று புண்கள் உள்ளவர்கள் (காலை
உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து
சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள
உணவுகளை உண்பதாலும் வரும்
புண்கள்) மணத்தக்காளி கீரையை
குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில்
சாப்பிடுவதால் குடல், வயிற்று புண்கள்
குணமாகும்.
- மணத்தக்காளி கீரையில் அத்தியாவசிய
சத்துகளான வைட்டமின், இரும்புச் சத்து,
பாஸ்பரஸ், கால்சியம் மற்றும்
இதர தாதுக்கள் அவசியமாக உள்ளன.
- மணத்தக்காளி கீரையை வளரும்
குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர்,
கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர
வயதுடையவர்கள் என அனைவருக்கும்
உணவாக உள்ளது.
- மணத்தக்காளி கீரையை தினமும் உணவில்
சேர்த்துசாப்பிட்டு வருபவர்களுக்கு
சிறுநீரகங்களில் கற்கள் உயராது. சிறுநீரக
கற்கள் உள்ளவர்கள் மணத்தக்காளி
கீரையை தினமும் உணவில் சேர்த்து
சாப்பிட்டால் சிறுநீரக கற்களைக் கரைக்கும்.
- மேலும், சிறுநீரை நன்கு பெருக்கி உடலில்
சேர்ந்திருக்கும் நச்சுகளை எல்லாம் சிறுநீர்
வழியாகவே வெளியேற்றி விடும்.
- திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும்
கருத்தரிக்க முடியாத பெண்களுக்கு
வாரம் இரண்டு அல்லது மூன்று
முறையாவது மணத்தக்காளி கீரையை
பக்குவம் செய்து சாப்பிட கொடுத்து வந்தால்
அவர்களின் கருப்பை பலம் பெரும். மேலும்,
உள்ளிருக்கும் நச்சுக்கள் எல்லாம்
வெளியேறி விடும்.
- உடலுக்கு குளிர்ச்சி, வாய்ப்புண், அல்சர்
பிரச்சனைகளுக்கு சிறந்தது.
- மணத்தக்காளி இலைகளை வாயில்
வைத்து உமிழ் நீரை சிறிது நேரம் தேக்கி
வைத்தால், ஓரிரு நாளில் வாயில் உள்ள
வெள்ளை நிற சூட்டு புண் சரியாகிவிடும்.
3. பொன்னாங்கன்னி கீரை:
- பொன்னாங்கன்னியில் மூன்று வகை உண்டு…
1. வெள்ளை (பச்சை) பொன்னாங்கன்னி கீரை
2. சீமை (சிகப்பு) பொன்னாங்கன்னி கீரை
3. நாட்டு பொன்னாங்கன்னி கீரை.
- கண் பார்வை சிறப்பாக இருக்கும்.
- வாய் நாற்றம், வாய்ப்புண் ஆகியவை நீங்கும்.
4. தூதுவளை:
- இதன் வேறு பெயர்கள் - தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம்.
- உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.
- ஜீரண சக்தியைத் தூண்டும்.
- தூதுவளைக் காய் - கண் நோய் நீங்கும்.
- தூதுவளைப் பூ - உடலுக்கு வலு கொடுக்கும்.
- தூதுவளை பழம் - வெயிலில் காயவைத்து
சாப்பிட்டால் மார்புச்சளி, இருமல், நீங்கும்.
5. சிகப்பு தண்டு கொடிபசலை:
- பசலைக்கீரையில் கொடி வகையில் சிகப்பு, பச்சை என
இரண்டு ரகங்கள் உள்ளது.
- கப்பு தண்டு கொடிபசலை கீரை சிகப்பு நிறத்தில் தண்டு
இலை இதய வடிவில் காணப்படும்.
- ஆண்கள் கொடி பசலைக் கீரைச் சாறு எடுத்து சாப்பிட்டு
வந்தால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை
அதிகரிக்கும்.
6. பிரண்டை:
- இதில் பட்டை,உருட்டு,ஓலை,சதுரம் என வகைகள் உண்டு.
- கால்சியம் சத்து அதிகம் நிறைந்தது.
- எலும்பு பலவீனத்தை போக்குகிறது.
7. முள்ளங்கி கீரை:
- நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும்.
- மலச்சிக்கலைக் குணப்படுத்தும்.
- கல்லீரலில் உண்டாகும் பலவிதமான கோளாறுகளை
குணப்படுத்தும்.
- இதயம் பாதிக்கப்பட்டவர்கள், இதயப் படபடப்பு,இதய
பலவீனம் உடையவர்கள் இருதயத்திற்கு பலம் சேர்க்கும்.
- சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும்.
- சிறுநீர்ப்பை வீக்கம் இருந்தாலும் குணமாகும்.
- சிறுநீர் கல்லடைப்பு,கரப்பான் என்ற தோல் வியாதிகளையும்
குணமாக்கும்.
8. லச்லக்கெட்டை கீரை:
- இது மூட்டு வலிக்கு சிறந்த மருந்தாகும்.
9. முளைக்கீரை:
- முளைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிரம்பியுள்ளது.
மேலும் இதில் தாமிரச் சத்துக்கள் அதிகம் இருக்கிறது.
10. பச்சை கொடிபசலை:
- உடல் தாகத்தை, உடல் வெப்பத்தையும் தணிக்கும்.
- குடலில் ஊறு செய்யும் மலத்தை வெளித் தள்ளும்.
11. பருப்புகீரை:
- பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச்
செய்வது.
- உடல் சூடு தணியும், மலச்சிக்கல் நீங்கும்.
- வெயில் காலத்தில் உண்பதற்கு ஏற்ற் கீரை இது.
- கல்லீரல் நோய்கள் தீரும்.
- இவை நுரையீரல் பாதிப்புகளில் இருந்து காக்கக்கூடியவை.
- மலச்சிக்கலைப் போக்குகிறது, குடற்புழுக்களை
அகற்றுகிறது.
- வயிற்று எரிச்சல், சிறுநீர் எரிச்சல் போகும்.
12. அம்மான் பச்சரிசி:
- வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.
- குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.
- மலச்சிக்கல் நீங்கும், உடல் சூட்டைத் தணிக்கும்.
- அம்மான் பச்சரிசி இலையை அரைத்து கொப்புளங்கள் மீது
பற்று போட்டால் கொப்புளங்கள் வீக்கங்கள் குணமாகும்.
- பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும் .
- அம்மான் பச்சரிசி பால் - மரு உதிர்ந்துவிடும்.
13. பாலக்கீரை:
- நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
- புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது.
- ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக்கிறது.
- ரத்த சோகை நோய் வராமல் தடுக்கிறது.
- புரத சத்து நிறைந்துள்ளது.
- மாரடைப்பு,ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய
நோய்கள் வராமல் தடுக்கிறது.
14. முடக்கத்தான் கீரை:
- மலச்சிக்கல், மூல நோய் போன்ற நோய்கள்
குணமாகின்றன.
- காது வலி நீங்கும்.
- பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம் நீங்கும்.
15. அகத்தி கீரை:
- உடலில் இயற்கையாக இல்லாத எல்லா கழிவு
பொருட்களையும் வெளியேற்றும் தன்மை கொண்டது.
- இதில் 63 விதமான சத்துக்கள் உள்ளன.
16. குப்பைமேனி கீரை:
- தோல் நோய்கள் குணமாகும்.
- முகத்திலுள்ள பருக்கள், புள்ளிகள் மறைந்து முகம்
பளபளப்பாக மாறும்.
- அழகும், ஆரோக்கியமும்உண்டாகும்.
17. துத்தி கீரை:
- குடல் புண்களை ஆற்றுகிறது.
- பல் ஈறுகளில் ரத்தம் கசிவது நிற்கும்.
- பல சித்த மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
- படர்தாமரை நோய்க்கு பயன்படுத்தப்படுகிறது.
- வெப்பக்கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.
- மூலநோய் குணமாகும்.
18. தவசிகீரை:
- வைட்டமின் எ, வைட்டமின் பி , வைட்டமின் சி,வைட்டமின்
கே போன்றவை அடங்கி உள்ளன.
- ரத்தத்தில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும்.
- பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலிமையை கொடுக்கும்.
19. கருவேப்பிலை:
- இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது.
- வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு
உதவுகிறது.
- சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.
- கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது.
- கல்லீரலைப் பாதுகாக்கிறது.
- கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது.
- முடியை வலுவாக்குகிறது.
- நீரிழிவு நோய்க்குத் தீர்வு கிடைக்கிறது.
- செரிமான மண்டலத்திற்கு நல்லது.
20. கல்யாண முருங்கை:
- கர்ப்பபை பிரச்சனைகளை சரி செய்கிறது.
- கருச்சிதைவிலிருந்து சிசுவைக் காக்கிறது.
- பெண் மலட்டுத் தன்மையை நீக்குகிறது.
- பருத்த உடல் இளைக்கும்.
- உடலை வலுவாக்கும்.
- ஆண்மை பெருகும்.