ஓரிரு வரிகளில் கீரை வகைகளும் அவற்றின் பயன்களும்
இந்த 2023 இல், மாறி வரும் உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையினால் நம்முடைய உடல் ஆரோக்கியம் குன்றி உள்ளது. பெரும்பாலான மருத்துவர்கள் இயற்கை உணவினை உண்ண அறிவுறுத்துகிறார்கள்.மேலும்,நாம் உணவில் ஏதேனும் ஒரு கீரையை எடுத்துக்கொள்ள சொல்கிறார்கள். அப்படி நம்முடைய அன்றாட உணவில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது கீரை. அத்தகைய கீரைகளின் வகைகளையும் அவற்றின் பயன்களையும் இங்கு சுருக்கமாக ஓரிரு வரிகளில் காண்போம்.
1.அகத்திக் கீரை - இது உடல் சூடு மற்றும் வயிற்றுப்புண் பித்தம் இரண்டையும் குறைக்கும்..
2.அரை கீரை - ஆண்களின் ஆண்மை தன்மையை அதிகரிக்கும்.
3.அம்மான் பச்சை கீரை - தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்க உதவும்.
4.அப்பக்கோவை கீரை - நமது சருமத்தில் உண்டாகும் தோல் நோயை குணமாக்கும்.
5.பசலைக் கீரை - வாயில் உண்டாகும் வாய்ப்புண்ணை சரிசெய்யும்.
6.பண்ணைக்கீரை/மகிலிக்கீரை - நமது உடல் சோர்வை போக்கும்.
7.பரட்டைக்கீரை - உடலில் ஏற்படும் இரத்த அழுத்தக் குறைபாடுகளை குறைக்கும்.
8.பருப்பு கீரை - நமக்கு உண்டாகும் மலச்சிக்கலை நீக்கும்.
9.பாலக் கீரை - உடலில் இரத்த விருத்தியை அதிகரிக்கும், சர்க்கரை நோயை சீராக்கும்.
10.பால்பெருக்கி கீரை / அண்டவாயுக்கீரை - தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து சீராக்கும்.11.பிரண்டை கீரை - வயிற்றுப்பிரச்னையான செரிமான பிரச்சனை நீங்கும்.
12.புளிச்சக்கீரை - ஆண்களின் ஆண்மையை பெருக்கும் மற்றும் மாலைக்கண் நோயை குணப்படுத்தும்.
13.புதினா கீரை - நமது ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது.
14.புளியங்கீரை - உடலில் உள்ள எலும்பை பலப்படுத்தும்.
15.புண்ணாக்கு கீரை - வயிற்றில் செரிமான சக்தியை அதிகரிக்கும்.
16.பொன்னாங்கண்ணிக் கீரை - நமக்கு கண்பார்வை சக்தியை அதிகரிக்கும்.
17.பொடுதலை கீரை - உடலில் வரும் தோல் நோய் குணமாகும்.
18.மணித்தக்காளி கீரை - நமக்கு வரும் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் இரண்டும் குணமாகும்.
19.மணலி கீரை - உடல் வாதத்தை குணப்படுத்தும்.20.மின்னக் கீரை - நம்முடைய நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
21.முள்ளங்கி கீரை - நமது சிறுநீரக பிரச்சினையைத் தீர்க்கும்.
22.முள்முருங்கைக் கீரை - பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய் வலி குறையும்.
23.முளைக் கீரை - குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு ஏற்றது.
24.முசுமுசுக்கை கீரை - உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருகிறது.
25.முசுட்டை கீரை - நம் உடல் சக்தியை அதிகரிக்கும்.
26.முருங்கைக் கீரை - ஆண்மையை அதிகரிக்கும், நம் கண்கள் மற்றும் உடல் பலம் பெறும்.
27.முடக்கத்தான் கீரை - கைகால் முடக்கத்தை சரிசெய்யும்.
28.மூக்கிரட்டை கீரை - அதிகமான சளியைக் குணப்படுத்தும்
29.தவசிக் கீரை - அடிக்கடி வரும் இருமல் குணமாகும்.
30.தண்டுக் கீரை - குடல் புண்களை ஆற்றும்அதோடு மலச்சிக்கலையும் போக்கும்.
31.தாளிக் கீரை - ஆண்மையை அதிகரிக்கும்.
32.துயிலிக்கீரை/தொய்யல்கீரை - உடலில் இரும்பு சத்துகளை அதிகரிக்கும்.
33.துத்திக் கீரை - வயிற்றில் குடற்புண் நீக்கும்.
34.தூதுவளை கீரை - ஆண்களுக்கு ஆண்மை பெருகும் மற்றும் அனைவருடைய சரும நோயும் குணமாகும்.
35.கரிசலாங்கண்ணி கீரை - நம் சளி, இருமலை குணமாக்கும்.36.கரிசாலை கீரை - நமது இரத்தசோகை குணமாகும்.
37.கற்பூரவள்ளி கீரை / ஓமவல்லி - பல் மற்றும் ஈறு பிரச்சனையை போக்கும் மற்றும் சளியை குணமாக்கும்.
38.கறிவேப்பிலை கீரை - நமக்கு வரும் தலை சுற்றலை போக்கும், நம் கண்பார்வையை அதிகரிக்கும்.
39.காட்டுத்தக்காளி கீரை - நமக்கு வரும் வறட்டு இருமல் நீங்கும்.
40.காட்டுக்கடுகுக் கீரை - நம்முடைய பசியை தூண்டும்.
41.கானாவாழை கீரை - உடல் எரிச்சல் மற்றும் கண்களுக்கு வரும் கண் வலியை சரிசெய்யும்.
42.காசினி கீரை - உடல் வெப்பத்தை தணிக்கும்.43.கிணற்று பச்சை கீரை - தீக்காயங்களை குணப்படுத்தும்.
44.கீழாநெல்லி - மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும்.
45.குறிஞ்சாக் கீரை - நீரிழிவு நோயை குணப்படுத்தும்.
46.குப்பை கீரை - நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
47.குமுட்டி கீரை - உடலில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.
48.கொத்தமல்லி கீரை - வயிற்று பிரச்சனைகள் நீங்கும்.
49.கொடி பசலைக் கீரை - குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு குணமாகும்.
50.கோவை கீரை - நமக்கு வரும் வியர்க்குருவை தடுக்கும்.
51.சண்டி கீரை - சரியான அளவு சிறுநீர் பெருகும்.
52.சக்கரவர்த்தி கீரை - உடலில் தாதுக்கள் விருத்தியாகும்.
53.சாண கீரை - உடலில் உண்டான காயங்களை ஆற்றும்.
54.சூரி கீரை - உடலில் உண்டாகும் சூட்டைத் தணிக்கும்.
55.சோம்புக் கீரை - பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்கிறது.
56.வல்லாரைக் கீரை - நமக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
57.வெந்தயக் கீரை - நம் மலச்சிக்கலை குணமாக்கும் மற்றும் மண்ணீரலையும், கல்லீரலையும் பலப்படுத்தும்.
58.வேலிப்பருத்தி கீரை - உடலில் சளியைப் போக்கும் மற்றும் குடல் புழுவை நீக்கும்.59.வேளை கீரை - உடல் பருமன் குறையும்.
60.நாயுருவி கீரை - நரம்புகளை வலுப்படுத்தும்.